அமெரிக்காவின் டெக்சாசைத் தாக்கிய ஹார்வீ புயல் நிவாரணத்துக்காக நடிகர், நடிகைகள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை உலுக்கிய ஹார்வீ புயலால் ஆயிரக்கணக்னோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க நடிகர், நடிகைகள் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். ஜெனிபர் லோபஸ், டுவைன் ஜான்சன், கெவின் ஹார்ட் மற்றும் விளையாட்டு வீரர் ஜே.ஜே.வாட் போன்ற பிரபலங்கள் நன்கொடைகளை வசூலித்து நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர். பிரபல நடிகை கிம் கார்தாஷியான் சுமார் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். விளையாட்டு வீரர் ஜே.ஜே.வாட் சமூக வலைதளம் மூலம் நிவாரண நிதிகளை சேகரித்து வருகிறார். 25 கோடி ரூபாய் வரை திரட்டி தர அவர் உறுதி பூண்டுள்ளார்.