உலகம்

வெய்ன்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை புகார்

வெய்ன்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை புகார்

webteam

அடுக்கடுக்கான பாலியல் புகார்களில் சிக்கியிருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை குற்றம்சாட்டியிருக்கிறார். 
ஹாலிவுட்டின் செல்வாக்குப் பெற்ற நபராகத் திகழும் வெய்ன்ஸ்டீன் ஆஸ்கர் விருதை வென்றவர். தற்போது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார். 
இந்நிலையில் ரோஸ் மேக்கோவன் எனும் ஹாலிவுட் நடிகை தம்மை வெய்ன்ஸ்டீன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். இவருடன் சேர்த்து இதுவரை 4 பெண்கள், வெய்ன்ஸ்டீன் மீது வன்கொடுமைக் குற்றச்சாட்டுக் கூறியிருக்கிறார்கள். மேலும் பலர் பாலியல் ரீதியான புகார்களைத்தெரிவித்திருக்கிறார்கள்.