உலகம்

‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நாயகிக்கு பெண் குழந்தை... வில்லா ஜோனாஸ் என பெயர் சூட்டல்

‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நாயகிக்கு பெண் குழந்தை... வில்லா ஜோனாஸ் என பெயர் சூட்டல்

webteam

பிரபல ஹாலிவுட் நடிகை சோஃபி டர்னருக்கும், அவரது கணவர் ஜோ ஜோனாசுக்கும் இந்த வாரம் மகிழ்ச்சியானதாக மாறியுள்ளது. அந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தின் புதிய வரவை வரவேற்ற அவர்கள், அந்தப் பெண் குழந்தைக்கு வில்லா ஜோனாஸ் என பெயரிட்டுள்ளனர்.

திரையுலகப் பிரபலங்களும் உறவினர்களும் நண்பர்களும் சோஃபி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைப் பிறப்புக்கு சில நாட்களுக்கும் முன்னர், கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகை சோஃபி டர்னரும், இசைக்கலைஞரான  அவரது காதல் கணவர் ஜோ ஜோனாசும் குழந்தைக்குத் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வந்துள்ளனர்.

“புதிய வரவு மிகவும் உற்சாகம் அளிப்பதாகவும், ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்றும் நட்சத்திர தம்பதிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் லாஸ்வேகாஸ் நகரில் திருமணம் செய்துகொண்ட சோஃபி தம்பதி, பின்னர் பிரான்ஸில் எல்லோரும் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினர்.