உலகம்

பனிப்புயலில் சிக்கி விபத்து; உயிருக்கு ஆபத்தான நிலையில் 'அவெஞ்சர்ஸ்' நடிகர் ஜெர்மி ரென்னர்

webteam

ஹாலிவுட் நடிகரான ஜெர்மி ரென்னர் பனிப்புயலில் சிக்கி காயம் அடைந்தநிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

'அவெஞ்சர்ஸ்' மற்றும் 'கேப்டன் அமெரிக்கா' படங்களின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர், ஹாலிவுட் நடிகரான ஜெர்மி ரென்னர். இவர், ‘தி ஹர்ட் லாக்கர்’ மற்றும் ‘தி டவுன்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். தற்போது ரென்னர், 'மேயர் ஆஃப் கிங்ஸ்டவுன்' என்ற படத்தின் 2வது பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நெவாடாவின் வாஷோ மாவட்டத்தில். ரென்னருக்கு சொந்தமாய் ஒரு வீடு உள்ளது. அங்கு புத்தாண்டுத் தினமான நேற்று (டிசம்பர் 1), அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதில் வாஷோ மாவட்டம் தவிர, பிற பகுதிகளும் இருளில் மூழ்கின. குறிப்பாக, 35,000 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தன. இந்தப் பனிப்பொழிவின்போது ரென்னரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரென்னர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தொடர்ந்து, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவருடைய உதவியாளர் கூறுகையில், “மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் ரென்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். மருத்துவமனை அறிக்கையும், அவர் ஆபத்தில் இருப்பதாகவே தெரிவித்துள்ளது.

-ஜெ.பிரகாஷ்