உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ரஷ்ய படைகளுக்கும் ரஷ்ய மக்களுக்கும் உணர்ச்சிகரமாக வெளியிட்டுள்ள 9 நிமிட வீடியோ பதிவில், உக்ரைன் மீதான போர் அறிவில்லாதனமானது என்று விமர்சித்துள்ளார். இந்த போரில் ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைன் வீரர்களை புதிய ஹீரோக்கள் என்று புகழ்ந்திருக்கும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ரஷ்யாதான் போரை தொடங்கியதாகவும், உக்ரைன் தொடங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் தனது படைகளை குவிக்க தொடங்கிய ரஷ்யா, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைன் நகரங்கள் மீது தீவிர தாக்குதலை நடத்த தொடங்கியது. போரை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த பலவேறு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன.