அமெரிக்காவில் நிழந்த முழு சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
அமெரிக்காவின் ஒரு கரையிலிருந்து மறு கரைவரை சுமார் 4200 கிலோமீட்டர் தூரத்திற்கு சூரிய கிரகணம் சுமார் 90 நிமிடங்களில் கடந்து சென்றது. அமெரிக்காவில் இதுபோன்று ஒரு கரையிலிருந்து மறு கரை வரை, சூரிய கிரணம் தெரிவது சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்ததால் இதை டெலெஸ்கோப், கருப்பு கண்ணாடி உள்ளிட்ட கருவிகளுடன் ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
நேரடியாக வெறும் கண்களால் சூரியனை பார்க்கவேண்டாம் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியதால் புகைபடிந்த தற்காலிக கருப்பு கண்ணாடியை கொண்டு மக்கள் சூரிய கிரகணத்தை பார்த்தனர்.
அமெரிக்காவின் ஒரெகான் பகுதியில் முதலில் தெரிந்த கிரணம் அப்படியே கடந்து சென்றபோது பூமியின் மீது நிழல் படிவது போன்று காட்சியளித்தது. அந்த நிழல் படர்ந்து அமெரிக்காவின் குறுக்கே பல மாகாணங்களில் தென்பட்டது. எஞ்சிய மாகாணங்களில் சூரிய கிரகணம் பகுதியாக தெரிந்தது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு நுழைந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை மறைத்து இறுதியில் ஒரு ஒளிவட்டம் மட்டுமே இருப்பது போல் காட்சியளித்தது. சில விநாடிகள் மட்டுமே நீடித்த இந்தக் காட்சியை மக்கள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.