சீனாவுக்கான பிரிட்டன் தூதர் லியூ ஜியோமிங் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசக்கூடியவராக அறியப்படுகிறார். அண்மையில் அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. புதன்கிழமையன்று ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆபாச வீடியோவுக்கு லைக் செய்யப்பட்டது பற்றி விசாரிக்கவேண்டும் என லண்டனில் உள்ள சீனத் தூதரகம் டிவிட்டர் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது, தூதரின் டிவிட்டர் கணக்கில் அந்த வீடியோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக லைக் பிரிவில் இருந்துள்ளது. அது அகற்றப்படுவதற்கு முன்பு பல கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகளை ஈர்த்திருந்தது. சீனாவுக்கு எதிரான சிலர், லியு ஜியோமிங்க் டிவிட்டர் கணக்கை முடக்கி, மக்களிடம் கெட்டப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் விரிவான விசாரணையை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற அவதூறுகளை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் சீனத்தூதரகம் கூறியுள்ளது.
எப்போதும் துணிச்சலாகப் பேசக்கூடியவராகக் கருதப்படும் சீனத்தூதர் லியூ ஜியோமின், தன் பிரத்யேக விவாதிக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்தி ஊடகப் பேட்டிகளில் சீன அரசை ஆதரித்துவருபவர் என்று கூறப்படுகிறது. டிவிட்டரும் ஆபாசப் படங்களும் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளன.