உலகம்

மாயன் இன மக்களின் அரண்மனை கண்டுபிடிப்பு

jagadeesh

மெக்சிகோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் சமுதாய மக்களின் அரண்மனையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக கருதப்படும் மாயன் சமுதாய மக்களின் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலைப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய ஜாடிகள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உக்ஸ்மல் நகரில் மாயன் இன மக்களின் அரண்மனை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை கி.பி. 670ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மாயன் நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாகவும், சுண்ணாம்பு கற்கள் கொண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.