உலகம்

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி 

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி 

webteam

அர்ஜென்‌டினாவில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் அதிர்‌ஷ்டவசமாக உயிர்த் தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளது‌‌‌‌. 

அர்ஜென்‌டினாவிலுள்ள ப்யோனஸ் அயர்ஸ் ரயில் நிலைய நடைமேடையில் ஓரமாக நின்று கொண்டிருந்த நபர், திடீரென நிலைத்தடுமாறி, அந்த வழியாக நடந்து வந்துகொண்டிருந்த பெண் மீது விழுந்தார். இதில் நிலைகுலைந்த அந்தப் பெண் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். 

திடீரென அந்தத் தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்தது. சுதாரித்துக்கொண்ட சக பயணிகள் கைகளை அசைத்தும், சைகைகளை காட்டியும் அந்த ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றவுடன், தண்டவாளத்தில் குதித்த சக பயணிகள் மயக்கமடைந்த நிலையில் விழுந்துகிடந்திருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.