இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தினமாக இன்று பலரும் இலங்கையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தமாக 4 தேவாலயங்கள், இரண்டு நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இலங்கையில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு, +94777903082, +94112422788, +94112422789, +94777902082, +94772234176 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை குண்டுவெடிப்பு குறித்து இந்திய தூதரிடம் விசாரித்து அறிந்தேன் எனவும், இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.