ஜெர்மன் தலைநகர் பெர்லினை கடுமையான புயல்மழை தாக்கியதால் அந்நகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சாலைகள் தோறும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீரில் மூழ்கி வாகனங்கள் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.