அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பியோனஸ் ஏர்ஸ் நகரின் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கு சோயாபீன் அறுவடையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.