உலகம்

இலங்கையில் கடும் மழை: 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடும் மழை: 21 பேர் உயிரிழப்பு

Rasus

இலங்கையில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் கொழும்பு, பொலநறுவை, புத்தளம், மொனறாகலா, காலி, களுத்துறை கேகாலை, இரத்தினபுரி, அனுராதபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

100 வீடுகள் முழுமையாகவும் 400 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாகாண நிர்வாகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு நிவாரணப் பணிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.