காதலர் தினத்தையொட்டி, பெல்ஜியம் நாட்டில் புகழ்பெற்ற கடை ஒன்றில் இதய வடிவத்தில் தயாராகி வரும் சாக்லெட்டுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பிரசல்ஸ் நகரைச் சேர்ந்த பெர்னார்டு ஸ்காப்பன்ஸ், சுவையான சாக்லெட்டுகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்றவர். சாக்லெட் தயாரிப்பு குறித்த போட்டிகளில் தொடர்ந்து விருதுகளை வென்று வருபவர்.
இவரது கடையில், காதலர் தினத்தையொட்டி, இதய வடிவத்தில் சாக்லெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சுவைகளுடன் பல்வேறு வண்ணங்களுடன் பெர்னார்டு தயாரித்துள்ள இதய வடிவ சாக்லெட்டுகள், பிரசல்ஸ் நகர மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.