உலகம்

விமானத்தில் ஹெட்ஃபோன் வெடித்து விபத்து

விமானத்தில் ஹெட்ஃபோன் வெடித்து விபத்து

webteam

விமானத்தில் பயணம் செய்த போது ஒரு பெண் பயன்படுத்திய ஹெட்ஃபோன் வெடித்ததில் அவருக்கு முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெர்பர்ன் நகர் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டுருந்தபோது, அது வெடித்துச் சிதறியது. சிறிய பாகங்கள் தரையில் விழுந்து தீப்பற்றின. உடனடியாக விமானப் பணியாளர்கள் வந்து தீயை அணைத்தனர். ஹெட்போனில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் தீப்பற்றியதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து, பேட்டரியில் இயங்கும் எந்தப் பொருளையும் விமானத்தில் பயன்படுத்த வேண்டாம் என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.