உலகம்

ட்ரம்பின் சவுதி பயணம் வேஸ்ட்... சீண்டும் ஈரான்!

ட்ரம்பின் சவுதி பயணம் வேஸ்ட்... சீண்டும் ஈரான்!

Rasus

ஏவுகணைச் சோதனைகளைத் தொடரப் போவதாக, ஈரானில் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஹசன் ரொஹானி அறிவித்திருக்கிறார்.

ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரொஹானி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மீண்டும் அதிபரான பிறகு முதல் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரொஹானி, ஏவுகணைச் சோதனைகளைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவுக்கு ட்ரம்ப் மேற்கொண்ட பயணம் எந்த வகையிலும் உதவாத வெற்றுக்காட்சி என்று அப்போது அவர் கூறினார். சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டிருக்கும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான‌‌ ஆயுத உடன்பாட்டையும் ரொஹானி குறை கூறினார்.

இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது, 2015-ம் ஆண்டு உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் இருந்து ஈரான் நினைத்ததை எல்லாம் செய்யலாம் என எண்ணி உள்ளது. ஈரான் பெரிய அளவில் நிதி அளித்து தீவிரவாதிகள் மற்றும் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருகிறது என அவர் குற்றம்சாட்டினார்.