மொஜ்தபா கமேனி  pt
உலகம்

மொஜ்தபா காமேனிக்கு அதிர்ச்சி? ஒரு காலை இழந்திருக்கலாம் எனத் தகவல்!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தாக்குதலில் ஒரு காலை இழந்திருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், அவர் தற்போது காயத்திலிருந்து மீண்டு நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

PT WEB

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, போர் தொடக்கத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் முகத்திலும் கால்களிலும் பலத்த காயமடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காயங்கள் காரணமாக அவர் ஒரு காலை இழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், ஆன்லைன் மூலம் நிர்வாகத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.