காஸா அமைதி ஒப்பந்தம் குறித்து எகிப்தில் உலகத்தலைவர்கள் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தவிருக்கும் நிலையில், அதற்கு ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நாளை நடைபெறுகிது. எகிப்தில் நடைபெறும் இந்நிகழ்வில் உலகத்தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் எகிப்து அதிபர் அல் ஃபட்டா எல் சிசியும் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
காஸா அமைதி ஒப்பந்த நிகழ்வை ஹமாஸ் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் கூறிய 20 அம்ச திட்டங்களில் சில ஏற்கும் படி இல்லை என ஹமாஸ் கிளர்ச்சிக்குழுவினர் கருதுகின்றனர்.
குறிப்பாக காஸாவை விட்டு தாங்கள் சுமுழுமையாக வெளியேற வேண்டும் என்ற அம்சத்தை ஏற்க முடியாது என ஹமாஸ் அமைப்பினர் கருதுகின்றனர். இதற்கிடையே முதல் கட்ட அமைதி ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை நாளை விடுவிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க உள்ளது.