ஹமாஸ் இஸ்ரேல் பயணகைதிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தன்பால் ஈர்ப்பாளர்களை தூக்கிலிட்டது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர நினைத்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்களின் வசமிருந்த பிணைக்கைதிகளை விடிவித்துக்கொண்டும் இருக்கின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) வெளியிடப்பட்ட ஆவணங்களில், ஹமாஸ் பயங்கரவாதிகள் சில ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஓரின பாலியல் பலாத்காரம் செய்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது குறித்தும் அவர்களுக்கு ஏற்பட்ட சித்திரவதை குறித்தும் தனது ஆவணத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டது.
இதனை அடுத்து ஹமாஸ், இஸ்ரேலிய ஆண் பணயக்கைதிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஹமாஸ் ஓரினச்சேர்க்கையாளர்களை தூக்கிலிட்டுள்ளது.
காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது. முன்னதாக, ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.