உலகம்

உபர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்!

உபர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்!

webteam

அமெரிக்காவைச் சேர்ந்த வாடகை கார் சேவை நிறுவனமான உபரின், 57 லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 50 லட்சம் உபர் வாடிக்கையாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் 7 லட்சம் உபர் நிறுவனத்தின் கார் ஓட்டுநர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவர்களில் 6 லட்சம் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிம தகவல்களும் அடங்கும். உபர் நிறுவனத்தின் தகவல்களை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொண்ட இணையத் தாக்குதல் மூலம், இரண்டு ஹேக்கர்கள் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.