உலகம்

முகத்தில் தேனீக்களை அமர வைத்து கின்‌னஸ் சாதனை

முகத்தில் தேனீக்களை அமர வைத்து கின்‌னஸ் சாதனை

webteam

கனடாவில் முகத்தில் தேனீக்களை ஒருமணி நேரம் அமர வைத்து இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். 

கனடாவின் ஆன்டாரியோ மாகாணத்தில் உள்ள தேன் பண்ணையில் பணியாற்றி வரும் ஜூவன் கார்லோஸ் நோகஸ் ஆர்டிஸ் என்பவர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தனது முகம் முழுவதும் தேனீக்களை அமர வைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார். காற்றடைத்த‌ பலூன் போன்ற அறையில் உடலை அசைக்காமல் அமைதியாக அமர்ந்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். கின்னஸ் சாதனை செய்யும் முயற்சிக்கு முன்னர், இரு முறை மட்டுமே தனது முகத்தில் தேனீக்களை அ‌மர வைத்து பயிற்சியில் ஈடுபட்டதாக ஆர்டிஸ் தெரிவித்தார். தேன் கூட்டில் மொய்ப்பது போல ஆயிரக்கணக்கா‌ன தேனீக்கள் அவரது முகத்தில் மொய்த்திருப்பதை கண்டு பொதுமக்கள் மிகுந்த‌ வியப்படைந்தனர்.