உலகம்

கவுதமாலா எரிமலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் மாயம்!

கவுதமாலா எரிமலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் மாயம்!

webteam

கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வாரம் கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை வெடித்துச் சிதறியதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல்‌ போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணவில்லை எனத் தெரியவந் துள்ளது. 

50 வயதாகும் கார்சியாவுடன் ஒன்பது பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறையாக வசித்து வரும் கார்சியாவின் 7‌‌5 வயது தாயும் இந்த எரிமலை வெடிப்பில் காணவில்லை. இவருடன் தனது‌ பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரையும் காணவில்லை என கார்சியா தெரிவித்துள்ளார். எரிமலை வெடித்து 8 நாட்கள் ஆகியும் இவர்களில் ஒருவரைக் கூட காணமுடியவில்லை என கார்சியா சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.