உலகம்

அமெரிக்காவில் செவிலியரை வன்முறையாக கைது செய்த காவலர்கள்

அமெரிக்காவில் செவிலியரை வன்முறையாக கைது செய்த காவலர்கள்

webteam

அமெரிக்க மருத்துவமனை செவிலியரை வன்முறையாக கைது செய்த காவலர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மருத்துவமனையில் செவிலியர் ஒருவரை காவல்துறையினர் முரட்டுத்தனமாகக் கைது செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன. நோயாளி ஒருவரின் ரத்த மாதிரியைக் கொடுக்க மறுத்ததற்காக அவரைக் காவல்துறை அ‌திகாரிகள் இவ்வாறு முரட்டுத்தனமாக கைது செய்தனர். இவர்களது உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் அந்தக் காட்சி பதிவாகியுள்ளது. இந்தக் கைது நடவடிக்கை குறித்து யுட்டா மாநிலத்தின் சால்ட் லேக் சிட்டி மேயர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.