உலகம்

2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரை!

2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரை!

EllusamyKarthik

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கான சரியான நபர் என சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, உலக பொது சுகாதார அமைப்பு (WHO) மாதிரியான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர்களை பரிசீலிக்கும் நோபல் கமிட்டி குழு வரும் அக்டோபரில் வெற்றியாளரின் பெயரை அறிவிக்கும். 

உலகம் முழுவதுமிலிருந்து பல்வேறு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் என ஆயிரக்கணக்கான பேர் ‘அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கான சரியான நபர் இவர்தான்’ என பல்வேறு பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். இது தவிர இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த ‘BLACK LIVES MATTER’ இயக்கத்தின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் நியாமான தேர்தல் வேண்டி போராடி வரும் பெலருஸ் நாட்டை சேர்ந்த மூன்று போராளிகளின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

ட்ரம்ப் இரண்டாவது முறையாக இந்த பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐ.நாவின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருந்தது.