சீனா முழுவதும் பிரகாசமான பெரும் நிலவு தென்பட்டதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.
நேற்று இரவு 2017 ஆம் ஆண்டின் மிகப்பெரிய நிலவு சீனாவின் வானத்தை அலங்கரித்தது. வழக்கமான நிலவை காட்டிலும் 30 சதவிகித அளவுக்கு கூடுதல் பிரகாசத்துடனும், பெரிதாகவும் நிலவு தென்பட்டதை, பெய்ஜிங்கில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் ஒன்று கூடி திரளான மக்கள் கண்டுகளித்தனர். வெறும் கண்களால் பார்க்கப்பட்ட இந்த நிலவு பிரகாசமான ஒளியாலும், அழகாலும் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இதனைபோல் தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டையான்சி ஏரியில் நிலவின் ஒளி பிரகாசமாக மின்னியதும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ஷாங்ஸி மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று தளமான பிங்யாவோவிலும் திரளான சுற்றுலா பயணிகள் முழு நிலவின் அழகை கண்டு ரசித்தனர்.