உலகம்

ஈராக்கில் தால் அஃபார் நகரை மீட்ட அரசுப் படைகள்: ஐஎஸ்-க்கு பின்னடைவு

ஈராக்கில் தால் அஃபார் நகரை மீட்ட அரசுப் படைகள்: ஐஎஸ்-க்கு பின்னடைவு

webteam

ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியி‌ல் இருந்த தால் அஃபாரின் பெரும்பான்மையான பகுதிகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் வச‌ம்‌ இரு‌ந்த மோசுல் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் மீட்டெடுத்தனர். இதன் தொ‌டர்ச்சியாக தால் அஃபார் நகரையும் மீட்டெடுப்பதற்கான முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ‌இந்நிலையில் ‌நகரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அபு மரியா கிராமத்தை ஈராக்கிய படைகள் மீட்டெடுத்துள்ளன. அங்கு பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ‌மீட்கும் ப‌ணிகள் நடந்து வருகின்றன.

அங்கிருந்து ஈராக்கிய படைகள் நகருக்குள் வேகமாக முன்னேறி வருவதால் தால் அ‌ஃபார் நகரம் முழுமையாக மீட்டெடு‌க்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்‌னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.