உலகம்

தாய்லாந்து: நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.!

தாய்லாந்து: நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.!

JustinDurai

தாய்லாந்து நாடாளுமன்ற கூட்டத்தின்போது எம்.பி. ஒருவர் ஆபாசப் படம் பார்த்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தின்போது பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது.

அப்போது ரொன்னாதேப் அனுவத் என்ற எம்.பி. தன்னுடைய செல்போனில் ஏதோ பார்த்தபடி இருந்துள்ளார். அவரை உற்று நோக்கிய போது, செல்போனில் ஆபாச படம் பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அவர், செல்போனில் அந்த ஆபாச படத்தை பார்த்தபடி இருந்தார். இதனால் அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பட்ஜெட் வாசிப்பின் போது ஒரு எம்.பி. நடந்து கொள்ளும் விதம் இதுதானா என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து அந்த எம்.பி.யிடம் கேட்டபோது, அவர் படம் பார்த்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் தான் ஏன் அதை பார்த்தேன் என்று ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார்.

அதில், தனக்கு வந்த செய்தி ஒன்றில் பெண் ஒருவர் அவசரமாக பண உதவி கேட்கிறார். கூடவே ஒரு புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். அதை திறந்து பார்த்தபோது ஆபாச புகைப்படம் இருந்தது. இதை வைத்து அந்த பெண் ஆபத்தில் இருக்கிறாரா? வற்புறுத்தப்படுகிறாரா? என்ற ரீதியில் ஆராய்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

இது எம்.பி.யின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று சபாநாயகர் சுவான் லீக்பாய் தெரிவித்துள்ளார்.