கூகுள் புதிய தலைமுறை
உலகம்

Googleக்கு ஆபத்து? குறையும் தேடுதல்கள்.. சரியும் வருமானம்.. காரணம் என்ன?

கூகுள் மூலம் இணையதளங்களில் தகவல்களைத் தேடுவது தற்போது குறைந்து வருவதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Prakash J

உலகளவில் 33% க்கும் மேற்பட்ட புதிய வலைத்தளங்கள் கூகுள் தேடல் பாதையை இழந்துள்ளன என்றும், அமெரிக்காவில் இந்தச் சரிவு இன்னும் அதிகமாக உள்ளது, அங்கு இதன் பாதை 38% குறைந்துள்ளது என்றும் அது குறிப்பிடுகிறது.

இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்துத் தகவல்களையும் பயனர்கள் வீட்டிலிருந்தபடியே, அதிலும் விரல் நுனியே தேடி விடுகின்றனர். அதிலும் கூகுளின் வருகைக்குப் பிறகு ஒட்டுமொத்த விஷயங்களையும் அவர்கள், அதிலேயே தேடிப் பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த தகவல்களையும் அது மொத்தமாகத் தருவதால், கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளமாகவும் இருக்கிறது. ஆனால், கூகுள் மூலம் இணையதளங்களில் தகவல்களைத் தேடுவது தற்போது குறைந்து வருவதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நிலை நீடித்தால் இன்னும் 3 ஆண்டுகளில் கூகுள் தேடுதல்கள் 40% குறைந்து விடும் என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது. ஏஐ வசதி வந்துவிட்டதால் பல்வேறு தளங்களில் உள்ள தகவல்களை ஒரே நேரத்தில் திரட்டி சாராம்சத்தை தரும் போக்கே கூகுள் சர்ச் தேவை குறையக் காரணம் என அந்த ஆய்வு கூறியுள்ளது.

கூகுள்

உலகளவில் 33% க்கும் மேற்பட்ட புதிய வலைத்தளங்கள் கூகுள் தேடல் பாதையை இழந்துள்ளன என்றும், அமெரிக்காவில் இந்தச் சரிவு இன்னும் அதிகமாக உள்ளது, அங்கு இதன் பாதை 38% குறைந்துள்ளது என்றும் அது குறிப்பிடுகிறது. மேலும், வானிலை, தொலைக்காட்சி வழிகாட்டிகள் அல்லது ஜாதகங்கள் போன்ற வாழ்க்கை முறை அல்லது பயன்பாட்டு உள்ளடக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற பதிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அது தெரிவித்துள்ளது. இதனால் இணையதள நிறுவனங்களின் விளம்பர வருவாய் கடுமையாகக் குறையும் போக்கு ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க இணையதள நிறுவனங்கள் யூ ட்யூப் போன்ற தளங்களுக்கு மாறுவது போன்ற யுக்திகளை பின்பற்றத் தொடங்கியுள்ளன.