ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கூகுள் மேப் செயலியில் இந்த பெயர் மாற்றம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றம் அமெரிக்காவில் உள்ள கூகுள் பயனாளர்களுக்கு மட்டுமே என்றும், மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு மெக்சிகோ வளைகுடா என்ற பெயரிலேயே கூகுள் மேப் செயலியில் தென்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
உலகில் உள்ள மற்ற நாட்டவர்களுக்கு இரண்டு பெயர்களும் காட்டுமென கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபராக பதவியேற்றதும், இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில், இந்த பெயர் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.