உலகம்

உலக அளவில் 30 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!

webteam

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்து 66 ஆயிரத்து 224 (5,66,224) பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக பிரேசில் நாட்டில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 749 பேரும், மூன்றாவதாக மெக்ஸிகோ நாட்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நாள் தோறும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 14,500 பேர் உயிரிழந்து வருகின்றனர். பிரேசில் நாட்டில் நாள் தோறும் 3000 நபர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 14 கோடி பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.95 கோடி பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கோடியே 45 லட்சம் பேர் இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.1 கோடியே 27 லட்சம் அதில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.