vaccination PT WEB
உலகம்

இந்தியாவில் போலி தடுப்பூசி சர்ச்சை.. சர்வதேச நாடுகள் மக்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் குறித்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.

PT WEB

இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் குறித்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் குறித்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, 2023 நவம்பர் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் 'அபய்ராப்' (Abhayrab) தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள், அதன் வீரியம் குறித்து மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

model image

இந்தியாவின் முன்னணி தடுப்பூசி நிறுவனமான 'இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட்', கடந்த ஜனவரியில் 'KA24014' என்ற ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் மட்டும் பேக்கிங் முறைகேடு நடந்ததைக் கண்டறிந்து அரசுக்குத் தெரிவித்திருந்தது. இது, தடுப்பூசி மருந்தின் தரம் சார்ந்த பிரச்னை அல்ல என்றும், அரசு விநியோக மருந்துகளைத் தனியார் சந்தைக்குத் திசைதிருப்ப நடந்த பேக்கேஜிங் மாற்றம் என்றும் நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெறிநாய்க்கடி பாதிப்பு 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், சர்வதேச நாடுகள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.