உலகம்

தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் மேக்ஸ்வெல் - இணையத்தில் வைரலாகும் மஞ்சள் நிற பத்திரிக்கை!

தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் மேக்ஸ்வெல் - இணையத்தில் வைரலாகும் மஞ்சள் நிற பத்திரிக்கை!

கலிலுல்லா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். அவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடிய அவரை அந்த அணி மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா காரணமாக திருமணத்தை நடத்த முடியாத சூழலில் தற்போது மார்ச் 27ம் தேதி மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது.

அவர்களது திருமண பத்திரிகை தமிழில் அச்சிடப்பட்டுள்ளதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.