உலகம்

துருக்கி: இடிபாடுகளில் 3 நாட்கள்... 3 வயது சிறுமி உயிருடன் மீட்பு.!

webteam

துருக்கி நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் 3 நாட்களாக சிக்கிக் இருந்த 3 வயது சிறுமியை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.

துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 20க்கும் அதிகமான கட்டடங்கள் சேதம்
அடைந்தன. அதே போல கிரீஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக நகரத்தின் பல பகுதிகள் புகைமண்டலமாக காட்சி
அளித்தது.

நிலநடுக்கம் காரணமாக இஷ்மீர் மாகாணம் செஃபெரிஹிசர் மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்டது. அது தொடர்பான காட்சிகள் சமூக
வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்காவின் புவியியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி கிரீஸின்
கார்லோவாசி பகுதியில் அதிகபட்சமாக 14 கிலோமீட்டருக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 85 பேர்
உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தநிலையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டட
இடிபாடுகளில் பலர் சடலமாக மீட்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இடிபாடுகளில் 3 நாட்களாக சிக்கி இருந்த 3 வயது சிறுமியான
எலிஃபை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மீட்புப்படையினர், கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள். சிறுமியை உயிருடன் மீட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை எலிஃபின் இரு சகோதரி, ஒரு சகோதரன் மற்றும் அவரது தாய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். எலிஃப் மட்டும் காணாமல் போன நிலையில் அவரும் தற்போது உயிருடன் மீட்கப்பட்டு குடும்பத்தோடு இணைந்துள்ளார்.