கானா நாட்டில் இயற்கை எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், 132 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கானா நாட்டின் தலைநகரான அக்கரா நகரின் மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இயற்கை எரிவாயு கிடங்கில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த எரிவாயு, பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 132 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் வானொலியில், அந்நாட்டு தகவல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் இதேபோல் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து அக்ரா நகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.