உலகம்

நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிப்பு

நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிப்பு

webteam

நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படவுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இந்த பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. நாளை மருத்துவத்திற்கான நோபல் பரிசும், அக்டோபர் 3ஆம் தேதி இயற்பியலுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி வேதியியலுக்கும் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளன. அக்டோபர் 5ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்படலாம் என கருதப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி அமைதிக்காகவும், அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.