சட்டவிரோதமான பதிவுகளை நீக்காத ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் ஜெர்மனியில் அமலாகியுள்ளது.
ஜெர்மனியில் அகதிகள் மீது இனவெறியை தூண்டும் விதத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது. வன்முறையை தூண்டுவது, மதம் தொடர்பான பிரிவினைவாதத்திற்கு ஊக்கம் அளிப்பது போன்ற தகவல்களைப் பகிர அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சட்டவிரோதமான பதிவுகளை பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீக்காவிட்டில் 5 கோடி யூரோ அபாரதம் விதிக்கப்படும் எனவும் ஜெர்மனி அரசு அந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.