ஓலாஃப் ஸ்கோல்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

ஜெர்மனி | பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. விரைவில் தேர்தல்!

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்சுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

Prakash J

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்சுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

ஜெர்மனியில் தி கிரீன்ஸ் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சோஷியல் ஜனநாயகக் கட்சி ஆட்சியமைத்தது. ஆளுங்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுதந்திர ஜனநாயகக் கட்சி வாபஸ் பெற்றதால் அரசியல் குழப்பம் நீடித்தது. இந்தச் சூழலில், பிரதமர் ஸ்கோல்சுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 394 வாக்குகள் கிடைத்தது.

தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால், பிரதமர் பதவியில் இருந்து ஓலாஃப் ஸ்கோல்ஸ் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி கலைப்பு தொடர்பான அறிவிப்பை அதிபர் ஃப்ராங்க் ஸ்டீன்மியர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்குப் பிறகு வெளியிடுவார் என தெரிகிறது.

இந்நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதிக்குள் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.