nepal protest x page
உலகம்

நேபாளம் |2025 ஜென்-ஜி போராட்டம்.. நாட்டிற்கு 84.5 பில்லியன் ரூபாய் இழப்பு!

'ஜென்-சி' அமைப்பு போராட்டத்தால் நேபாளத்துக்கு, அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 84.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

'ஜென்-சி' அமைப்பு போராட்டத்தால் நேபாளத்துக்கு, அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 84.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பரில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்ததாலும், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாராலும் அதிருப்தியடைந்த இளைஞர்கள் வீதிகளில் போராடினர். இதன் விளைவாக பிரதமர் சர்மா ஒலி பதவி விலகி இடைக்காலப் பிரதமராக சுஷிலா கார்க்கி பொறுப்பேற்றார்.

nepal protest

இந்நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் பாதிப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அமைத்த குழு தனது விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில், போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தீவைப்புச் சம்பவங்களால் 84.5 பில்லியன் நேபாள ரூபாய் மதிப்புக்கு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்ததால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாகத் தங்கள் வேலைவாய்ப்பை இழந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.