GAZA
GAZA PTI
உலகம்

இஸ்ரேலின் செயலால் உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் காஸா மக்கள்!

PT WEB

காஸா மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வரும் இஸ்ரேல் காஸாவுக்குள் அடிப்படை தேவைகளான
உணவு மருந்து உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதை தடுத்துள்ளது. மின்சாரத்திற்கு தேவையான எரிபொருளையும் உள்ளே அனுமதிக்காததால் காஸா பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

GAZA

"பணயக் கைதிகள் அனைவரும் வீடு திரும்பும் வரை காஸாவில் ஒரு மின்சார விளக்கும் எரியாது, ஒரு குழாயிலும் தண்ணீர் வராது, ஒரு எரிபொருள் வாகனம் கூட உள்ளே நுழைய முடியாது" என இஸ்ரேலில் எரிசக்தித்துறை அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள் அனுமதிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எகிப்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை வீசப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

GAZA

ஒருவேளை இஸ்ரேல் தரைவழித்தாக்குதல் நடத்தினால் அதை சமாளிப்பதற்காக ஹமாஸ் படையினர், தங்களது ஏவுகணைகளை சேமித்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.