உலகம்

மகன் 2021! மகள் 2022! 15 நிமிட இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்த அமெரிக்க பெண்!

EllusamyKarthik

வழக்கமாக உருவத்தில் ஒரே மாதிரியாக தோற்றம் அளிக்கும் இரட்டையர்களுக்கு இடையே அவர்கள் பிறந்த நேரம் சில நிமிடங்கள் மட்டும் மாறுபடும். அந்த சில நிமிட மாறுபாடு அண்மையில் பிறந்த இரட்டையர்களுக்கு இடையே பிறந்த தேதி, நேரம், நாள், ஆண்டு என அனைத்தையும் மாற்றி உள்ளது. 

கலிபோர்னியாவை சேர்ந்த பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியர் அண்மையில் அந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோராகி உள்ளனர். 2022 பிறக்க 15 நிமிடங்கள் மட்டும் இருந்த நிலையில் பிரசவ வார்டில் டிசம்பர் 31, 2021 இரவு 11.45 மணி அளவில் தனது மகனை ஈன்றெடுத்துள்ளார் பாத்திமா. 2022 பிறந்த சில நொடிகளில் ஜனவரி 1, 2022 நள்ளிரவு 12 மணி அளவில் தனது மகளை ஈன்றெடுத்துள்ளார் அவர். அந்த பகுதியில் அந்த பெண் குழந்தைதான் புத்தாண்டு அன்று பிறந்த முதல் குழந்தை. 

இரண்டு மில்லியன் வாய்ப்புகளில் அரிதினும் அரிதாக இது மாதிரியான நிகழ்வுகள் இருப்பதுண்டு என சொல்லப்படுகிறது. பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர், “இது எனது பணி காலத்தில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம்” என தெரிவித்துள்ளார். 

தனது இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு நாட்களில் பிறந்த நாள் வருவது தனக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார் பாத்திமா.