உலகம்

கேரளாவுக்கு பில்கேட்ஸ் பவுண்டேஷன் ரூ.4.20 கோடி உதவி!

கேரளாவுக்கு பில்கேட்ஸ் பவுண்டேஷன் ரூ.4.20 கோடி உதவி!

webteam

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் மறுசீரமைப்புக்காக ’மைக்ரோசாப்ட்’ அதிபர் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ரூ.4.20 கோடியை வழங்கியுள்ளார்.

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகவும் நிலச்சரிவு காரணமாகவும் ஏராளமானோர் தங்கள் வீடுகளை, உடைமைக ளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும் என கேரள அரசு கேட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் நிதியை கேரளாவுக்கு அளித்துள்ளது. 

இந்நிலையில் வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண மற்றும் சுகாதார பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ‘யுனி செப்‘ அமைப்பும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘மைக்ரோசாப்ட்‘ நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தனது, ‘பில் அண்ட் மெலிண்டா
கேட்ஸ் பவுண்டேசன்’ மூலம் கேரள மறுசீரமைப்புக்காக 6 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.4.20 கோடி) நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகையை யுனிசெப் அமைப்புக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.