உலகம்

காந்திக்கு மரியாதை செலுத்திய துபாய்

காந்திக்கு மரியாதை செலுத்திய துபாய்

webteam

மகாத்மா காந்தியின் உருவம், தேசியக்கொடியில் ஜொலித்த புர்ஜ் கலிஃபா கட்டடம்

அகிம்சை வழியில் போராடி இந்தியாவின் சுதந்திரத்துக்காக உழைத்த காந்திஜியின் பிறந்த நாளை இந்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்து காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறது. அதன்படி நேற்று காந்தியின் 150வது பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் துபாயின் அடையாளமாக விளங்கும் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா (BURJI KHALIFA) கட்ட‌ட நிர்வாகத்தின் சார்பில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி புர்ஜ் கலிஃபா கட்டடம் இந்திய மூவண்ணக்கொடியால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கட்டடத்தில் மகாத்மா காந்தியின் உருவமும் பொறிக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. வண்ண மின்விலக்குகளால் தேசியக்கொடி மற்றும் காந்தியின் உருவத்துடன் ஜொலித்த கட்டடத்தை அனைவரும் கண்டு ரசித்தனர்.