அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆசிய - அமெரிக்க பூர்வீகத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் மீது சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்து, அந்த பெண்ணை இழிவுபடுத்தியுள்ளார்.
நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இந்த சோகம் அவருக்கு நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது Queen-bound F train என்ற ரயிலில் அந்த பெண் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது அருகே வந்து நின்ற நபர் ஒருவர் இந்த செயலை செய்துள்ளார்.
“மதியம் 1.30 மணி அளவில் நான் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது கருப்பு நிற பேண்ட் மற்றும் ஜாக்கெட் அணிந்த நபர் ஒருவர் எனது அருகில் வந்து நின்றார். நான் அதை விரும்பாததால் வலது பக்கமாக திரும்பினேன். அப்போது திடீரென இந்த செயலை அந்த நபர் செய்து விட்டார். எனது ஜாக்கெட் மற்றும் பை வீணாகி விட்டது. அவர் முகக் கவசம் அணிந்திருந்ததால், கண்களை மட்டும்தான் கவனித்தேன். அவருக்கு 60 வயது இருக்கலாம். எனது செல்போனில் அவரை படம் பிடித்துள்ளேன். போலீசிலும் புகார் தெரிவித்துள்ளேன்” என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபரை தேடி வருகின்றனர். அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளும் இருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த குற்றத்தை செய்தவரின் ஜாக்கெட்டில் அமெரிக்க கொடி பதிக்கபட்டு இருந்ததாகவும் தெரிகிறது.
அண்மைய காலமகவே அமெரிக்காவில் ஆசியாவை சேர்ந்தவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.