உலகம்

பாதித்த ஒயிட் ஒயின் உற்பத்தி... தீப்பந்தத்துடன் களத்தில் இறங்கிய பிரான்ஸ் விவசாயிகள்

நிவேதா ஜெகராஜா

பிரான்ஸ் நாட்டில் ஒயிட் ஒயின் (WHITE WINE) உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸில் தற்போது பனிக்காலம் நடந்து வருகின்றது. பிரான்ஸ், ஒயிட் ஒயின் உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் நாடு என்பது பலரும் அறிந்த விஷயமே. அந்த ஒயிட் ஒயினுக்கு தேவைப்படும் திராட்சை செடிகள் பனிக்காலத்தில் பனி காரணமாக உறைந்து போகும் சூழ்நிலை உள்ளது.

இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதை கணித்துள்ள பிரான்ஸ் விவசாயிகள், திராட்சை செடிகளை குளிரில் இருந்து பாதுகாக்க தோட்டங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் மிகுந்த பாதுகாப்புடன் வயல்களில் அவர்கள் தீப்பந்தங்களை ஏற்றி வைத்து வருகின்றார்கள்.