உலகம்

ஆர்டர் செய்த உணவு லேட்: உணவக ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்

webteam

பிரான்ஸ் தலைநகர் பாரிசில்‌, ஹோட்டல் ஒன்றில் உணவு தாமதமாக கொண்டுவரப்பட்டதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், ஊழியரை சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாயிசி- லீ- கிராண்ட் என்ற நகரிலுள்ள உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர், சாண்ட்விச் ஆர்டர் செய்துள்ளார். வாரக் கடைசி நாள் என்பதால் உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் உணவுகளை தயாரிக்க நேரம் பிடித்ததால், அந்த வாடிக்‌கையாளருக்கு சாண்ட்விச்சை கொண்டு வந்து கொடுக்க தாமதமாகியுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் உணவக ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் அவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உணவக ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி ஓ‌டிவிட்டார். இந்த நிகழ்வு அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், துப்பாக்கியால் சுட்டவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.