உலகம்

”சிறையில் வாடும் பெண் பத்திரிகையாளர் சாங் சானை விடுவியுங்கள்” - சீனாவுக்கு ஐ.நா கோரிக்கை

”சிறையில் வாடும் பெண் பத்திரிகையாளர் சாங் சானை விடுவியுங்கள்” - சீனாவுக்கு ஐ.நா கோரிக்கை

JustinDurai
வூஹான் கொரோனா நிலவரத்தை ஆவணப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் பத்திரிகையாளரை விடுவிக்குமாறு சீனாவுக்கு ஐநா வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தான் கொரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாங் சான் என்ற பெண் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு வூஹான் நகருக்கு பயணம் மேற்கொண்டு கொரோனா பரவலை சீன அரசு கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ பதிவு செய்தார். இதனையடுத்து கடந்த மே 2020ல் சாங் சான் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாங் சான் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. சாங் சான் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் சாங் சானை விடுவிக்குமாறு சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் அவை கோரிக்கை விடுத்துள்ளது. 'சாங் சானின் உடல்நிலை மோசமடைந்து வருவதைப் பற்றி நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்' என ஐநா தெரிவித்துள்ளது.