சுதந்திரா தேவி சிலை pt web
உலகம்

“சுதந்திர தேவி சிலையை மீண்டும் கொடுங்கள்” அமெரிக்கா, ஃபிரான்ஸ் இடையே வார்த்தை மோதல் - பின்னணி என்ன?

சுதந்திர தேவி சிலையை பிரான்சிடம் மீண்டும் ஒப்படைக்கப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

PT WEB

1886 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் அரசு இடையிலான நட்புறவை குறிக்கும் வகையில் சுதந்திர தேவி சிலை பரிசாக வழங்கப்பட்டது. இந்த சூழலில், பிரான்ஸ் - ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபேல் ஃக்ளக்ஸ்மேன்( Raphaël Glucksmann), சுதந்திர தேவி சிலையை பிரான்சிடம் மீண்டும் அமெரிக்கா ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், சுதந்திர தேவி சிலை அளிக்கப்பட்ட மதிப்பை அமெரிக்கா உரியமுறையில் கடைபிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்(Karoline Leavitt), சுதந்திர தேவி சிலையை பிரான்சிடம் மீண்டும் ஒப்படைக்கும் திட்டம் இல்லை எனக் கூறியதுடன், ரஃபேல் ஃக்ளக்ஸ்மேனின் பெயர் குறிப்பிடப்படாத ஒரு கீழ்மட்ட பிரெஞ்சு அரசியல்வாதி என தனது உரையின்போது குறிப்பிட்டார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால்தான் இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார்.