உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகளைப் பற்றி கவலையில்லை: பிரதமர் மோடி 

rajakannan

ஜி7 உச்சி மாநாட்டின் நடுவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்தச் சந்திப்பில் இருவரும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினர். ட்ரம்ப் பேசிய போது, “நேற்றிரவு காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேசினோம். காஷ்மீர் விவகாரம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக மோடி கூறினார். இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளும்” என தெரிவித்தார். 

அதேபோல், பிரதமர் மோடி பேசிய போது, “காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயானது. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து கவலை இல்லை. என்னுடைய நண்பர் டிரம்ப் உடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் தேர்தலில் வெற்றி பெற்ற போது அவர் என்னை வாழ்த்தினார்” என்று கூறினார். 

முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என ட்ரம்ப் கூறிவந்தார். ஆனால், தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த விவகாரத்தை பார்த்துக் கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.