உலகம்

தொடர்ந்த ‘கும்மாங்குத்து’- டெக்சாஸ் அருங்காட்சியகத்திலிருந்த ட்ரம்பின் மெழுகு சிலை அகற்றம்

EllusamyKarthik

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகம் ஒன்றில் பார்வையாளர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்பின் மெழுகு சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வினோதமான செயலே இதற்கு காரணம் என அந்த அருங்காட்சியகம் விளக்கம் கொடுத்துள்ளது. 

டெக்சாஸின் சான் அந்தோனியோ நகரில் உள்ள Louis Tussaud இன் மெழுகு சில அருங்காட்சியகத்தில் உலகத்தின் ஆளுமை மிக்க தலைவர்களின் சிலைகள் மெழுகு சிலைகளாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ட்ரம்பின் சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சிலையை பார்வையாளர்கள் மீண்டும், மீண்டும் சேதப்படுத்தியதோடு, கைகளால் ‘கும்மாங்குத்து’ விட்டுள்ளனர். 

‘பார்வையாளர்களின் இந்த செயல் எங்களுக்கு சிக்கலை உருவாக்கலாம். இதில் அரசியலும் இருப்பதால் சிலையை காட்சிப்படுத்துவதை நிறுத்தியுள்ளோம்’ என அருங்காட்சியகம் விளக்கம் கொடுத்துள்ளது.