உலகம்

“சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு ட்ரம்ப் விரைவில் திரும்புவார்” - ட்ரம்பின் ஆலோசகர் தகவல்!

EllusamyKarthik

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் தனக்கென ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்க உள்ளதாகவும், அதன் மூலம் உலக மக்களுடன் அவர் தொடர்பு கொள்வார் எனவும் அவரது ஆலோசகரான ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார். “விரைவில் ட்ரம்ப் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு திரும்புவார். அது அடுத்த இரண்டு அல்லது மூன்று மாத காலங்களுக்குள் நிகழும். தனக்கென பிரத்யேக வலைத்தளத்தை உருவாக்க உள்ளார்” என மில்லர் தகவல் அளித்துள்ளார். 

கடந்த ஜனவரியில் அமெரிக்க கேபிடல் வளாகத்தில் கலவரத்தை தூண்டியதாக ட்ரம்பின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து அவர் தடை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ட்ரம்பின் வருகை சமூக வலைத்தளங்களில் நிச்சயம் பெரிய அளவிலான மாற்றங்களை செய்யும். அவரது வருகைக்கு பின்னர் அவர் என்ன செய்ய உள்ளார் என்பதை அறிய பலரும் ஆவலாக இருப்பதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.